[X] Close >

’தோனி டீம் Vs டூ பிளசிஸ் டீம்’ பயிற்சி ஆட்டத்தில் மிரட்டிய சி.எஸ்.கே வீரர்கள்: வீடியோ

CSK-players-split-into-two-teams-FOR-a-training-match-IPL-2020

வரும் சனிக்கிழமை அன்று (செப்.16) ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. 


Advertisement

image

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் களத்தில் ஆக்டிவாக விளையாடாமல் இருந்த வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு அணியும் வலைப் பயிற்சி மேகொண்டனர். தோனி உட்பட சி.எஸ்.கே அணி வீரர்கள் அதில் சிக்ஸர்களை பறக்கவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

இந்நிலையில் போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டம் ஆடினர் சி.எஸ்.கே வீரர்கள்.

image

வாட்சன், ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, பியூஸ் சாவ்லா, தாக்கூர், சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் ஒரு அணியாகவும். 


Advertisement

டூ பிளசிஸ், முரளி விஜய், ஜெகதீசன், ஜடேஜா, சஹார், கரண் ஷர்மா, லுங்கி இங்கிடி உள்ளிட்ட வீரர்கள் ஒரு அணியாகவும் இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடியுள்ளனர். 

பயிற்சி ஆட்டத்தின் வீடியோ தற்போது ட்விட்டரில் சென்னை அணி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெய்னா தொடரிலிருந்து விலகிய நிலையில் சென்னை அணியின் பேட்டிங் லைன் அப்பில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக பேசப்பட்டு வந்தது. 

இந்த ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்கில் பலமாக இருப்பதாகவே தெரிகிறது. பந்துகளை மைதானத்தின் அனைத்து பக்கமும் சென்னை பேட்ஸ்மேன்கள் தெறிக்க விட்டுள்ளனர். 

image

அதோடு மூன்றாவது பேட்ஸ்மேனாக ராயுடு, டூ பிளசிஸ் அல்லது கேதார் ஜாதவ் ஆகிய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் இறங்கி விளையாட அதிக வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

அதே போல கேப்டன் தோனி வழக்கம் போல மிடில் ஆர்டரிலேயே இறங்கி விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கவும் : https://bit.ly/3krHHBD

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close