விருதுகளைக் குவித்த ’ஒத்த செருப்பு’ ’சில்லுக்கருப்பட்டி’: மகிழ்ச்சியில் பார்த்திபன், ஹலிதா

Award-winning-Tamil-films--Parthiban--Halita-Shameem-in-Happiness

டொரண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு சைஸ் 7 மற்றும் சில்லுக்கருப்பட்டி படங்கள் விருதுகளைக் குவித்துள்ளன.


Advertisement

கடந்த வருட இறுதியில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி, தயாரித்து, அவர் ஒருவரே நடித்து பாராட்டுகளையும் வெற்றியையும் குவித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் 2020 ஆம் ஆண்டிற்கான டொரோண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருது,  சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த சோலோ ஆக்ட் பிரிவுகளில் மூன்று விருதுகளை குவித்துள்ளது.

image


Advertisement

அதேபோல, கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ’சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்தது. அந்தப் படமும் சிறந்த திரைப்பட இயக்குநர் விருதையும், சிறந்த பரிசோதனை முயற்சி திரைப்படத்திற்கான ஜூரி விருதையும் வென்றுள்ளது.

image

இதனால், இயக்குநர்கள் பார்த்திபனும், ஹலிதா ஷமீமும் உற்சாகத்தில் அடுத்தப் படங்களுக்கு மும்மரமாக தயாராகி வருகிறார்கள்


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement