’நாளை அடுத்த படம் குறித்த அப்டேட்’ : லோகேஷ் கனகராஜ் ட்வீட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது அடுத்த படம் யாருடன் என்ற தகவல் குறித்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், கைதியில் திரைப்பட இயக்கத்தில் தனது அங்கீகாரத்தை பதிவு செய்திருந்தார். விஜயின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி வெளியாகியது. கைதியை தொடர்ந்து அடுத்த படத்தில் விஜயுடனே இணைந்தார் லோகேஷ் கனகராஜ்.

image


Advertisement

விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது பல சர்ச்சைகள் வெடிக்க, வெற்றிகராக படம் எடுத்து முடிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனாவால் படம் தள்ளிப்போனது. படம் எப்போது வெளியாகும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் படத்தை விஜய்க்கு வெகுவாக பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகின. இதனால் அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜ்க்கு விஜய் வாய்ப்பு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே ரஜினியுடன் அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக லோகேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம்.. அக்டோபர் 2ல் ஓடிடி, டிடிஹெச்-ல் ரிலீஸ்

loading...

Advertisement

Advertisement

Advertisement