இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனமான ‘அதானி கிரீன்’ பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 1,300% உயர்ந்திருக்கிறது.
வாரத்தின் 2வது வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 288 புள்ளிகள் உயர்ந்து 39,044.35 புள்ளிகளுடன் முடிவுக்கு வந்தது. அத்துடன் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 11,251.80 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டியில் சிப்லா, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, கிராசிம் ஆகியவையின் பங்கு மதிப்புகள் உயர்ந்தன. அதேசமயம் டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டிசிஎஸ், இசேர் மோட்டார்ஸ் ஆகியவை சரிவை சந்தித்தன.
மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டில் தொழிலபதிபர் அதானியின், அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் 5% உயர்ந்தன. மொத்த மதிப்பீட்டில் ரூ.670.55 கோடிக்கு அதானி கிரீன் நிறுவனம் உயர்ந்திருந்தது. அத்துடன் அதானியின் நிறுவனங்களிலேயே அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் தான் முதன்முதலில் ஒரு டிரில்லியன் அளவிற்கு சந்தை மதிப்பை எட்டியது.
அதன்படி, அதானி கிரீன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வளர்ச்சியை கடந்த ஒரு வருடத்தில் கணக்கிடும்போது 1,300% ஆகும். அண்மையில் சோலார் மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் பெற்ற அதானி, அதில் ரூ.45,000 கோடி முதலீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’