அமெரிக்க இராணுவ அதிகாரியாக நடித்து ஹரியானா நபரிடம் 1.24 கோடி ஏமாற்றிய பெண்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க இராணுவ அதிகாரி போல நடித்து, ஹரியானா குருகிராமை சேர்ந்த 60 வயது நபரிடம் 1.24 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளார் ஒரு பெண்.


Advertisement

image

குருகிராமில் சக்கர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாருதி விஹாரில் வசிக்கும் திரேந்திர குமார், அவருக்கு பூனம் மேக்லா என்ற பெண்ணிடமிருந்து முதலில்  வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது . அந்தப் பெண் அமெரிக்காவில் இராணுவ பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் பணிபுரிவதாக அவரிடம் சொல்லியுள்ளார், பின்னர் அவர்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர்.


Advertisement

"இந்தியாவில் ஒரு மருந்து நிறுவனத்தைத் திறக்க விரும்புவதாக அந்தப் பெண் என்னிடம் கூறினார், இதற்காக அவர் எனக்கு சுமார்  8.7 மில்லியன் டாலர்களை அனுப்புகிறார். பின்னர், ஜூன் 19 முதல் 2020 ஜூலை 17 வரை அவரிடமிருந்து பல அழைப்புகள் வந்தன. பிறகு அமெரிக்காவிலிருந்து ஒரு பெட்டி வந்துள்ளதாகவும், அதைப் பெறுவதற்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று  சுங்கத்துறை அதிகாரிகள் கூறினார்கள். பின்னர் நான் ஒரு ஆன்லைன் தளத்தின் மூலம் அந்த தொகையை டெபாசிட் செய்தேன் "என்று பாதிக்கப்பட்ட திரேந்திரகுமார் தெரிவித்தார்.

"இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று குருகிராம்  காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போக்கன் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement