2003 ஆம் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா எடுத்த 6 விக்கெட்டுகளுக்கு பின்னால் கடுமையான வலி இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
2003 ஆம் உலகக் கோப்பை நினைவுகளை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா "அந்த உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. இங்கிலாந்து வெற்றிப் பெற 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போது இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களை எடுத்திருந்தது. எல்லோரும் இங்கிலாந்து எளிதில் வெற்றிப்பெறும் என நினைத்திருந்தபோதுதான் ஆசிஷ் நெஹ்ரா பந்துவீச வந்தார்" என்றார்.
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா "ஆசிஷ் நெஹ்ரா பந்துவீச தொடங்கியவுடன் நாசர் ஹூசைன், பால் காலிங்வுட், மைக்கல் வாகன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா பிரமாதமான வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் நெஹ்ரா 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனால் இந்தக் கதையெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். அதனால் தெரியாத விஷயம் ஒன்றை இப்போது சொல்கிறேன். போட்டிக்கு முந்தைய நாள் ஆசிஷ் நெஹ்ராவின் கால்கள் வீங்கியிருந்தது. ஐஸ் நிறைந்த பக்கெட்டில் கால்களை வெகுநேரம் வைத்திருந்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "மறுநாள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது வீங்கிய கால்களில் கட்டுகளுடன், கனமான சாஸக்ஸ்களுடன் களமிறங்கி விளையாடினார். ஷூ அணிவதற்கு கூட சிரமப்பட்ட நெஹ்ராவால் அன்றையப் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. வலியை தாங்கி தன்னால் விளையாட முடியும் என நினைத்தார். அதற்கு அப்போதைய கேப்டன் கங்குலியும் உறுதுணையாக இருந்தார். ஒரு வீரர் விளையாட வேண்டும் என நினைத்தால் வலி ஒரு தடையில்லை என நிரூபித்து சாதித்தார் அவர். இப்போதுள்ள இளம் வீரர்களும் அதனை உணர வேண்டும்" என்றார்
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ