வரும் சனிக்கிழமை அன்று துபாயில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக உள்ள ட்ரீம் லெவனின் சந்தை மதிப்புகள் இரட்டிப்பாகி உள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை சுமார் 225 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது.
இது கடந்த ஆண்டு முதலீட்டு நிறுவனங்கள் ட்ரீம் லெவனின் பங்குகளை வாங்கியதை காட்டிலும் இரட்டிப்பாக்கியுள்ளது.
ஏற்கனவே ட்ரீம் லெவேன் பங்குகளை வாங்கி வைத்துள்ள கலாரி கேப்பிடல்ஸ், திங் இன்வெஸ்ட்மெண்ட் மாதிரியான நிறுவனங்கள் இம்முறை ட்ரீம் லெவன் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சுமுகமற்ற சூழ்நிலையினால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ விலகியதை அடுத்து ட்ரீம் லெவேன் கடந்த ஆகஸ்டில் நடப்பு சீசனுக்கான டைட்டில் ஸ்பான்சரானது.
மேலும் ட்ரீம் லெவனில் சீனாவை சேர்ந்த டென்சென்ட் சுமார் பதினைந்து சதவிகித பங்குகளை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது ட்ரீம் லெவன் நிறுவனம் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முயன்று வருவதாக தெரிகிறது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?