ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உடல்நல பிரச்னையால் ஷின்சோ அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், யோஷிஹைட் சுகா ஜப்பான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இதனையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக ஆளும் லிபரல் டெமாகிரடிக் கட்சியினர் கூடி வாக்கெடுப்பு நடத்தினர். இதில் 71 வயதான யோஷிஹைட் சுகா ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

image


Advertisement

மொத்தமுள்ள 534 உறுப்பினர்களில் 377 பேர் சுகாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் சுகா பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் புதன்கிழமை ஷின்சோ அபே பதவி விலகி, பிரதமராக சுகா பொறுப்பேற்க உள்ளார். ஷின்சோ அபே கொள்கைகளை அப்படியே பின்பற்றப் போவதாக சுகா கூறியுள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த சுகா, பள்ளிப் படிப்பை முடித்து அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து அதில் கிடைத்த ஊதியத்தில் கல்லூரியில் சேர்ந்தவர். கட்சியில் கீழ் நிலை தொண்டராக இருந்து பிரதமராக உயர்ந்துள்ள இவர், அபேவின் நெருக்கமான உதவியாளராக இருந்தவர். கொரோனா வைரஸ் , பொருளாதார வீழ்ச்சி, சீனாவுடனான மோதல் என பல சவால்களுக்கு மத்தியில் சுகா நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கிறார்

loading...

Advertisement

Advertisement

Advertisement