[X] Close

ஐபிஎல் 2020 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிட்டராக ஷேன் வார்னே 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு இணைந்து செயல்பட்டு வருபவர். 


Advertisement

image

முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது அவர் தான் கேப்டன். 2011 சீசனுக்கு பிறகு பயிற்சியாளர், அனுபவ வீரர், வழிகாட்டி என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு இணைந்தே பணியாற்றி வருகிறார். 


Advertisement

அவர் தேர்வு செய்யும் வீரர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற அளவிற்கு அணி உரிமையாளரின் நம்பிக்கையை பெற்றவர் வார்னே.

கடந்த 2019 சீசனனில் ராஜஸ்தானின் பிராண்ட் அம்பாசிட்டராக செயல்பட்டார் வார்னே. இந்த சீசனிலும் அவர் அணியின் வழிகாட்டியாகவும், அம்பாசிட்டராகவும் இருப்பார் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

image


Advertisement

இதனையடுத்து துபாயில் முகாமிட்டுள்ள ராஜஸ்தான் அணியோடு வார்னே இணைய உள்ளார். 

“ராஜஸ்தான் அணி எனக்கு எனது குடும்பம் போல. நான் மிகவும் நேசிக்கும் ஒரு அணியோடு பணியாற்றுவது எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. அணியின் பயிற்சியாளர் மெக் டொனால்ட் மற்றும் இயக்குனர் ஸுபினுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை ஆர்வமாக எதிர் நோக்கியுள்ளேன். இந்த சீசன் எங்களுக்கு வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என வார்னே தெரிவித்துள்ளார். 

image

வரும் 22 ஆம் தேதியன்று  சென்னை அணியோடு ராஜஸ்தான் அணி மோத உள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement