போதையில் முற்றிப்போன சண்டை... சக பணியாளரின் விரலைக் கடித்து துண்டித்த நபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களான மோஹித் குமாரும், அவரது சீனியர் ஹேமந்தும் கடந்த வியாழக்கிழமை வேலையை முடித்துவிட்டு, அருகிலிருந்த மதுக்கடையில் மது வாங்கி காரில் அமர்ந்து குடித்திருக்கின்றர்.


Advertisement

குடித்துவிட்டு திரும்பும்போது ஒரு சாதாரண விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுவே சண்டையாக மாறி ஹேமந்த், குமாரின் ஆள்காட்டி விரலைக் கடித்து துண்டாக எடுத்ததுடன், அவரை காரிலிருந்து வெளியே விரட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

image


Advertisement

பிறகு அருகிலிருந்த எல்.பி.எஸ் மருத்துவமனைக்கு கொண்டுசென்று, அறுவைசிகிச்சை மூலம் விரலை பொருத்தி இருக்கின்றனர். இதுகுறித்து விசாரித்த துணை போலீஸ் கமிஷ்னெர் ஜஸ்மீத் சிங், மயுர் விஹார் காவல் நிலையத்தில் ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement