அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனத்திடம் ரூ. 2 கோடியை பறிகொடுத்த மருத்துவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் தஞ்சை மருத்துவரிடம் 2 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக மருத்துவர், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்துள்ளார்.


Advertisement

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முத்தமிழ்நகர் சிலப்பதிகாரத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஒய்வு பெற்ற போது இவருக்குக் கிடைத்த பணப்பலன்கள் மற்றும் தனது வீட்டைவிற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் வைத்திருந்தார்.


Advertisement

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 7 பேர் அவரது வீட்டிற்கு வந்து, நாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். 1 வருட நிரந்தர வைப்பீடுகளுக்கு 10.5 சதவீதம் வட்டி தருவதாகவும், அவரது வங்கியில் உள்ள பணத்தை தங்களது நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யுமாறு ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பிய மருத்துவர், அவரது மனைவி, மகள்கள், மற்றும் மருமகன்களும் அந்த நிதிநிறுவனத்தில் 22.8.2018 முதல் 15.7.2019 வரை ரூ. 2கோடி வைப்பீடு செய்துள்ளார். தற்போது வைப்பீடுகள் அனைத்தும் முடிவடைந்து வட்டியுடன் ரூ. 2கோடியே 99 லட்சத்து 56 ஆயிரத்து 796 தர வேண்டும். ஆனால் பணத்தை திருப்பித்தராமல் அலைக்கழித்து உள்ளனர்.

image


Advertisement

மேலும், பணத்தை தரக்கூடாது என்ற நோக்கத்தில் வேறு சிலரும் அதனை கோருவதாக பொய்யான ஆவணங்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள் மீறி பணம் கேட்டால் அடியாட்களை அழைத்து வந்து மிரட்டுகின்றனர். இதனால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது.

எனவே தனக்கு உரிய பணத்தை தராமல் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தங்களுக்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத்தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement