[X] Close

சிக்ஸ் அடிப்பதில் கெயிலுக்கு டஃப் கொடுக்கு சிறுவன்..! அசத்தல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறுவன் ஒருவர் கிரிக்கெட் பேட்டால் பந்துகளை சிதறடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Advertisement

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சமூக வலைத்தளங்களில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான கணிப்புகளையும், தனது கருத்துகளையும் அவர் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சோப்ரா, அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் எப்படி பேட்டிங் செய்கிறார் பாருங்கள் என ஆச்சர்யமாக தெரிவித்திருந்தார்.

 
 
 
View this post on Instagram

How good is this young kid!!! #talented #aakashvani #feelitreelit #feelkaro


Advertisement

A post shared by Aakash Chopra (@cricketaakash) on

அந்த வீடியோவில், மாடிப்படியில் பேட்டை வைத்துக்கொண்டிருக்கும் சிறுவன், தனக்கு வீசப்படும் பந்தை சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாணியில் வானத்தில் பறக்கவிடுகிறான். சிக்ஸர்களுக்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுக்கு சவாலளிக்கும் வகையில் அந்த சிறுவனின் ஷாட் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அந்த சிறுவன் ஜூனியர் கிறிஸ் கெயில் என்றும், பலர் அந்த சிறுவனை யுவராஜ் சிங்குடன் ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்.

“எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை” - விஜய பிரபாகரன்

loading...

Advertisement

Advertisement

Advertisement