அனுபவமில்லாமல் சைக்கிளிங் பயணம்... முன்னாள் எம்.எல்.ஏ மகன் மாரடைப்பால் மரணம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

48 வயதான அனுபவமில்லாத சைக்கிள் ஓட்டுநர், 100 கிமீ சைக்கிளில் செல்ல முயற்சித்ததால், பாதிவழியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.


Advertisement

கர்நாடகாவின் பிகலி பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ். படேலின் மகன் வினோத். இவர் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பகல்கோட் சைக்கிள் ஓட்டுநர்கள் குழுவில் மூன்று வருடங்களாக உறுப்பினராக இருக்கிறார்.

இவர்கள் சைக்கிளில் 100கிமீ செல்லவேண்டும் என இலக்கு வைத்து, ஞாயிற்றுக்கிழமை முதலில் பகல்கோட்டிலிருந்து கேரூர் வரை செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். 25கிமீ தூரத்தைக் கடந்தபின், ஓர் இடத்தில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் 15 கிமீ தூரம் தாண்டி சென்றுள்ளனர்.


Advertisement

image

செல்லும் வழியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைக் கண்டறிந்த அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் கிரிஷ் நாயக், முதலுதவி செய்துள்ளார். பிறகு காரில் ஏற்றி, கேரூரில் உள்ள அரசு மருதுவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வினோத், பயணத்தைத் தொடங்கும்முன்பு, போனமுறை 100கிமீ இலக்கில் 70 கிமீதான் சென்றடைய முடிந்தது. இந்தமுறை 100கிமீ இலக்கை அடைவோம் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement