ஐ.பி.எல். போட்டிகளில் எந்த அளவுக்கு பணம் கிடைக்கிறது. ஏன் ஐபிஎல் போட்டிகளை கொரோனா காலத்திலும் நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. அது ஏன் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
விராட் கோலியின் கவர் ட்ரைவ், மகேந்திர சிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், பும்ராவின் அதிவேகம், ரோஹித் சர்மாவின் அதிரடி, கிறிஸ் கெய்லின் காட்டடி. அற்புதமான கேட்ச்கள், துல்லியமான ரன் அவுட், கொஞ்சம் கிரிக்கெட் மோகம், நிறையப் பொழுதுபோக்கு இவை அனைத்தும் பணமாக மாறி கொட்டும் இடம் ஐபிஎல். கிரிக்கெட்டை மிகக் கச்சிமான வியாபாரமாக மாற்றி, உலகின் செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது ஐபிஎல்.
ஓராண்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைக்கும் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாய். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கிறது. விளம்பரங்கள் , தொலைக்காட்சி உரிமங்கள், ஆன்லைன் சூதாட்டங்கள், டிக்கெட், போக்குவரத்து, சுற்றுலா, ஆடைகள், தின்பண்டங்கள் என ஒட்டு மொத்தமாக 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் புழங்குவதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
விராட் கோலி, தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் சம்பளமாக மட்டும் இதுவரை நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்திருக்கிறார்கள். சர்வதேசப் போட்டிகளில் ஆடும்போது அவர்களுக்கு இவ்வளவு பணம் கிடைப்பதில்லை. உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலம். இந்த நாடுகளில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் உரிமங்களைப் பெற்றிருக்கும் நிறுவனங்கள் பெருமளவு லாபம் ஈட்டுகின்றன.
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஒரேநேரத்தில் ஆன்லைனில் பார்க்கிறார்கள். தொலைக்காட்சிகளின் ரேட்டிங் பலமடங்கு அதிகரிக்கிறது. இவையெல்லாம்தான் பல வீரர்களுக்கு கொரோனா வந்த பிறகும் ஐபிஎல் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!