பிரதமர் உள்ளிட்ட இந்திய பிரபலங்களை உளவு பார்த்ததாக சீன நிறுவனம் மீது குற்றச்சாட்டு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பிரபலங்களை சீன நிறுவனம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பம், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சீனாவை சேர்ந்த ஜென்ஹுவா டேட்டா இன்போடெக் நிறுவனம் உளவு பார்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், அம்ரீந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக் மற்றும் சிவராஜ் சிங் சவுகான், ஆகியோரும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

image


Advertisement

அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் சிங் ராவத் மற்றும் 15 முன்னாள் ராணுவத் தளபதிகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிபதிகள், விஞ்ஞானிகள், முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் ஹிந்து பத்திரிகையின் ஆசிரியராக இருந்த என். ரவி உள்ளிட்ட 10 ஆயிரம் இந்திய பிரபலங்களும் இந்த கண்காணிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

image

தனிநபர் தொடர்பான தகவல்களை ஜென்ஹுவா டேட்டா இன்போடெக் நிறுவனம் சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது சீன உளவுத்துறை மற்றும் ராணுவத்துடன் ஜென்ஹுவா டேட்டா இன்போடெக் தொடர்பில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஜென்ஹூவா நிறுவனத்தை தொடர்ந்து கண்காணித்து இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சீன செயலிகள் தனிநபர் தகவல்களை திருடி அந்நாட்டு அரசுக்கு அளிப்பதாக கூறி டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில், உளவு வேலை பல ஆண்டுகளாகவே நடைபெற்றுவருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement