பாலியல் புகார் மீது‌ நடவடிக்கை இல்லை எனக் குற்றச்சாட்டு: தானே விசாரணையில் இறங்கிய பெண்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை முகலிவாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த நபர்கள் குறித்து காவல்துறைனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட பெண்ணே விசாரணையில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

image


சென்னை முகலிவாக்கத்தில் கடந்த வியாழக்கிழமை 23 வயது இளம்பெண் ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அவரை பாலியியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. உடனடியாக அப்பெண் ஆன்லைன் மூலமாக எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து தானே களத்தில் இறங்கிய அப்பெண் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை திரட்டி விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Advertisement

 

இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அப்பெண் “ நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அங்கு தான் மட்டுமல்லாது பல பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தானே விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பட்சத்தில், தான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர் இந்த நாட்டில் பெண்ணை விட பசுமாட்டிற்கு அதிகமாக பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை தொடர்புகொண்டு அவர் சேகரித்த ஆதாரங்களைத் திரட்டினர். 

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement