சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரும் தோனியும் வலைப்பயிற்சியில் பந்துகளை பறக்கவிடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே இருக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவுள்ளதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுக் கொண்டே செல்கிறது.
இதனிடையே, ஐபிஎல் அணிகளும் தங்கள் பங்கிற்கு பயிற்சி ஆட்டத்தில் கலக்கலான வீடியோக்களை தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர். ரிஷப் பண்ட், ரோகித் சர்மா என வீரர்கள் அதிரடியாக சிக்ஸர் விளாசும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அண்மையில் சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் தோனி தனக்கு வீசப்பட்ட பந்தினை சிக்ஸருக்கு விளாசுகிறார். தோனி அடிக்கும் பந்து மைதானத்திற்கு வெளியே ஏதோ ஒரு மரங்களுக்கு நடுவில் சென்று விழுகிறது. அந்த வீடியோ வைரலானது.
At the ripe old age of 39 .... just two old guys doing what we love @ChennaiIPL ???? pic.twitter.com/GM8AQlDgS6— Shane Watson (@ShaneRWatson33) September 13, 2020
இப்போது ஷேன் வாட்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "பழுத்த 39 வயதில் இரண்டு பேர் மிகவும் நேசிப்பதை செய்துக் கொண்டு இருக்கிறோம்" என தெரிவித்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தோனியும், வாட்சனும் வலைப்பயிற்சியில் தங்களுக்கு வீசப்படும் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிடுகின்றனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை