[X] Close

திருவள்ளூர்: கேக் வாங்க வந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவேற்காட்டில் கேக் வாங்க வந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட நபரை, புகார்தாரர்களே அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement

 

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அர்ஜுன மேடு பகுதியை சேர்ந்தவர் மணி முத்து வேலன்(36), கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவியின் செல்போனுக்கு அவதூறான அழைப்புகள் வந்ததாகச் சொல்லப்படுகிறது.


Advertisement

இதனையடுத்து செல்போனில் அழைத்த நபரிடம் விசாரித்த போது, செல்போன் எண் சமூக வலைதளத்தில் கிடைத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த மணி முத்து, சமூக வலைதளத்தில் தனது மனைவியின் எண்ணை பரவ விட்ட நபரை கண்டறியும் முயற்சியில் இறங்கினார்.

image

இதனையடுத்து முன்னதாக அழைத்து பேசிய நபர் குறிப்பிட்ட சமூக வலைதளப் பக்கத்தை முத்து சென்று பார்த்துள்ளார். அதில் அவரது மனைவியின் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து அதில் செல்போன் எண் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கணக்கின் மூலமாக சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட ஆப்பின் மூலம் தொடர்பு கொண்டு முத்து தரப்பினர் பெண் போல பேசி அவரிடம் இருந்து புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.


Advertisement

image

இதில் சம்பந்தப்பட்ட நபர் பேக்கரியில் பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது உறவினரின் பிறந்த நாளுக்கு கேக் ஆர்டர் செய்ய வந்த முத்துவின் மனைவியிடம், டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறி வலுக்கட்டயாமாக செல்போன் எண்ணை வாங்கியதும் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்த உறவினர்கள் அவரை திருவேற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து சிம் கார்டுகளை பறிமுதல் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement