‘2020 ஐபிஎல்’ தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் ? - கெவின் பீட்டர்சன் கணிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

13வது ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை அன்று துபாயில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார். 


Advertisement

image

ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றவுள்ள பீட்டர்சன் இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு நேற்று முந்தினம் கிளம்பிய சூழலில், பயணத்தை தொடங்கியதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். 


Advertisement

‘கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது மன நிறைவாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது உற்சாகம் கொடுக்கிறது. இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
View this post on Instagram

From a bubble in the UK to a bubble in Dubai...! I love that we have cricket back and as always very excited about working on the @iplt20. Who’s winning? I hope Delhi! ??

A post shared by Kevin Pietersen ? (@kp24) on


Advertisement

2012-14 வரை டெல்லி அணிக்காக பீட்டர்சன் விளையாடியுள்ளார். ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியை ஷ்ரேயஸ் ஐய்யர் கேப்டனாக வழி நடத்தவுள்ளார். வரும் 20ஆம் தேதியன்று பஞ்சாப் அணியோடன் தனது முதல் முதல் போட்டியை டெல்லி அணி தொடங்கவுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement