மூச்சுத்திணறல் பாதிப்பு: அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரொனா  தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

எனினும்,  உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால்,  கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த மாதம்  18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா  அனுமதிக்கப்பட்டார். 


Advertisement

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதையடுத்து, ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement