பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். சீரியஸ் ஆன கதையை தேர்வு செய்திருந்தாலும் அதனை சொல்லிய விதத்தில் பலரது பாராட்டை பெற்றார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் தனுஷை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில்தான் இவர்களது கூட்டணி கர்ணன் படம் தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் நெல்லை மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இந்தப் படம் தொடர்பாக போஸ்டர்களும், இசைப் பாடல் ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
அந்த வகையில், தனுஷின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கதாநாயகி ரஜிஷா விஜயன். அந்த புகைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ், யோகிபாபு மற்றும் பிற கலைஞர்களும் ஷாட்டை கூர்ந்து கவனித்தபடி உள்ளனர். மேலும், மலையாள இயக்குநர் லால் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மேலுஜ் நடராஜன் சுப்ரமணியன், லக்ஷி பிரியா சந்திரமௌலி மற்றும் கௌரி கிஷேன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Karnan ?#Karnan #கர்ணன் ? pic.twitter.com/3Y88MsvB4J— Rajisha Vijayan (@rajisha_vijayan) September 12, 2020
இந்த படத்தின் கதை 1991ஆம் ஆண்டு கொடியன்குளத்தில் நடந்த கலவரம் பற்றியது என கூறுகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?