சைக்கிள் பயணி ஒருவர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திவிட்டு, உதவி செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறி நாடகமாடிய தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் அவஸ்தி என்பவர் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடம்பர கார் ஒன்றில் வந்து கொண்டிருந்த சோனித் ஜெயின் என்பவர் எதிர்பாராத விதமாக அவஸ்தி சென்று கொண்டிருந்த சைக்கிளின் மீது மோதினார். இதில் நிலைதடுமாரி கீழே விழுந்த அவஸ்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சுய நினைவை இழந்தார்.
உடனடியாக அவரை மீட்ட ஜெயின் அருகில் உள்ள மூல்சந்த் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் அவஸ்தி சாலையில் சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக கூறி அனுமதித்துள்ளார். ஆனால், அவஸ்தி அங்கு சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அமர் காலணி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினர் ஓக்லா மண்டி பகுதி முழுவதும் அலசினர். ஆனால் விபத்து நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை. இதனிடையே அவஸ்தியை தேடி அலைந்த அவரது பெற்றோர் இரத்தக்கரை படிந்த அவரது பையை பதர்பூர் பாலத்தின் அருகில் இருந்து எடுத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, விபத்தை நிகழ்த்தியது கரோல் பாக் பகுதியில் நிறுவனம் நடத்தி வந்த ஜெயின்தான் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஜெயின் தான் காரை வைத்து விபத்தை நிகழ்த்தியதையும், மருத்துவமனையில் பொய்யான தகவலைக் கூறி அவஸ்தியை அனுமதித்ததையும் ஒப்புக்கொண்டு அவர் இறந்த செய்தி கேட்டவுடன் அங்கிருந்துச் சென்றதாகவும் கூறினார்.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!