[X] Close >

10 மணி நேர வேலை, பக்குவமான ட்ரீட்மென்ட்: 102 வயதிலும் அசராத டாக்டர்!

Meet-Pune---s-102-year-old-doctor

புனேவை சேர்ந்த பி.பி.காட்பாண்டேவுக்கு தொழில் மருத்துவம். இந்த டாக்டரைத் தேடி ஏராளமான பேஷண்டுகள் இப்போதும் வருகிறார்கள். ’டாக்டரை தேடி பேஷண்டுகள் வராம, வேற யார் வருவா?’ என்று கேட்கலாம். அது மேட்டரல்ல. இந்த டாக்டருக்கு வயது, ஜஸ்ட் 102-தான்!
‘தினமும் 10 மணி நேரம் வேலை பார்க்கிறேன். வெறும் 30 ரூபாய்தான் பீஸ். என் வாழ்க்கையில ரிடையர்ங்கறதே கிடையாது. ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை அளிச்சுட்டு இருக்கும்போதே உயிர் போகணும்ங்கறதுதான் ஆசை’ என்கிறார் காட்பாண்டே. இவரது மொத்த குடும்பமும் டாக்டர் தொழிலில்தான் இருக்கிறது.


Advertisement

 ’மருத்துவ தொழில் உன்னதமானது. மக்களுக்காக நாம பண்ற இந்த சேவை மிகப்பெருசு. இந்த தொழில் மூலம்தான் எனக்கு எல்லாம் கிடைச்சது. பணம், நம்பிக்கை, மக்கள் எம்மேல வச்சிருக்கிற மதிப்பு எல்லாமே’ என்கிற காட்பாண்டே, ‘என்னை உழைச்சுட்டே இருக்கிறவர்னு சொல்வாங்க. அப்படி சொல்றதுல எனக்கு பெருமைதான். என்னால சும்மா இருக்க முடியாது. வேலை பார்த்துக்கிட்டே இருக்கணும்’ என்கிறார். உடல்நிலை சரியில்லை என்று இன்னொரு டாக்டரை இவர் சந்தித்ததே இல்லையாம். எப்படி?

‘தினமும் உடற்பயிற்சி. சரியான உணவு முறை, இதுதான் காரணம். எனக்கு ஒரு நோயும் வந்ததில்லை’ என்கிறார் காட்பாண்டே.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close