இரவில் பிரியாணி, புரோட்டா சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இரவில் பிரியாணி, புரோட்டா சாப்பிட்டதால், ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.


Advertisement

image

சென்னை துரைப்பாக்கம், ஆர்.இ.நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தினேஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.தினேஷ் நேற்று இரவு பிரியாணி, பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவனுக்கு சற்று நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சீவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தினேஷை அவரது பெற்றோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தினேஷ் உயிரிழந்துள்ளார்.


Advertisement

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய துரைப்பாக்கம் காவல்துறையினர், சிறுவனின் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகே, இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement