ஜோதி ஸ்ரீ துர்காவின் மரணம் நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது – மு.க.ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.


Advertisement

 நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது குறித்து திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

 ‘’மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு" என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது.


Advertisement

 ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.

தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன். நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.’’

 இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement