உடல் பாவனையில் வேற லெவல்.. டயலாக் டெலிவரியில் அடிதூள்... ‘மீம்களின் நாயகன்’ வடிவேல்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் வடிவேலுவும் ஒருவர். அவருக்கு இன்று பிறந்தநாள். 


Advertisement

image

‘மக்களை சிரிக்க வைப்பதற்காக தினந்தோறும் நான் நகைச்சுவை செல்வமாக பிறந்து கொண்டே தான் இருக்கிறேன். மக்கள் சக்தி இல்லாமல் வடிவேலு இல்லை’ என அவரே ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருக்கு சக்தி கொடுப்பது மக்கள் என்றால். மக்களுக்கு சக்தி கொடுப்பது அவரது காமெடி தான். 


Advertisement

உதாரணமாக சில காமெடிகளை பார்த்தாலும் சிரிப்பு வராது. ஒரு சிலவற்றை பார்த்தால் தான் சிரிப்பு வரும். ஆனால் வடிவேலு காமெடிகளை கேட்டாலே சிரிப்பு வரும். 

அதே போல வீடியோவை மியூட் செய்து விட்டு அவரது ரியாக்ஷன்களை பார்த்தாலும் சிரிப்பு வரும். டயலாக் டெலிவரி, பாடி லேங்குவேஜ் என இரண்டிலும் சிக்சர் அடிப்பவர் வடிவேலு.

image


Advertisement

அதோடு ஒருநாளை வடிவேலுவின் காமெடி இல்லாமல் பெரும்பாலானவர்களால் கடக்கவே முடியாது. 

யாரிடமாவது நாம் பேசிக்கொண்டு இருக்கும் போதே ''ஒரு படத்துல வடிவேலு சொல்வாறே'' என்று எதேச்சையாக ஒரு எடுத்துக்காட்டை நிச்சயம் சொல்லி விடுவோம். 

மீம்ஸ், போட்டோ கமெண்ட், ட்ரெய்லர் - வடிவேலு வெர்சன், பாடல் - வடிவேலு வெர்சன், சீன்ஸ் - வடிவேலு வெர்சன், அரசியல் நடப்புகள் - வடிவேலு வெர்சன் என வடிவேலு வெர்சன் வராத டிஜிட்டல் கண்டென்ட்டுகளே இல்லை. 

image

அப்படி அனைத்திற்கும் பொருந்தும்படி அவ்வளவு கதாபாத்திரங்களை குவித்து வைத்திருக்கிறார் வடிவேலு. 

எதாவது கான்செப்ட் கிடைத்தால் வடிவேலு டெம்பிளேட்டுகளை வைத்து பொழுதுபோக்கும் மீம் கிரியேட்டர்கள், கான்செப்ட் இல்லை என்றால் வடிவேலுவையே டெம்பிளேட்டாக வைத்து செய்துவிடுவதும் உண்டு.

அந்தளவிற்கு மக்களின் அபிமானத்தை பெற்றவர் நடிகர் வடிவேலு.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement