காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி என தீர்மானமா? - காங்கிரஸ் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.


Advertisement

 சென்னை மேற்கு மாவட்ட காங்கிரசின் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர்‌ வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.‌ அதில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்‌டும் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அப்படியேதும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement