தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

காங்கிரஸ் தலைமையிலிருந்து பல மாநிலங்களுக்கு புதிய பொதுச்செயலாளர்களும், புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டிகு தினேஷ் குண்டு ராவ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்திற்கு மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கோவாவிற்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

image


Advertisement

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் தெலுங்கானாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியும், மத்தியப் பிரதேச காங்கிர பொதுச்செயலாளராக முகுல் வாஸ்னிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக எம்பியான ஜோதிமணிக்கு பொதுத்தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து குலாம் நபி ஆசாத் விடுவிப்பு : காங்கிரஸில் அதிரடி மாற்றம்

loading...

Advertisement

Advertisement

Advertisement