உடல்நலக்குறைவால் காலமானார் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக ஆர்வலரும், ஆர்ய சமாஜ் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80


Advertisement

சுவாமி அக்னிவேஷ் சில மாதங்களாக கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

image


Advertisement

சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் என்றும், கொத்தடிமை முறைக்கு எதிராக தனது வலுவான குரலை பதிவு செய்தவர் எனவும் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement