“தோனி குறித்து முதலில் கேள்விபட்டதை நிஜத்தில் உணர்ந்தேன்” - பாகிஸ்தான் முன்னாள் வீரர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிரிக்கெட்டில் தோனி சச்சினின் இடத்தை நெருங்கிவிடுவார் என தான் முதலில் கேள்விப்பட்டதை அண்மையில் உணர்ந்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லடிஃப் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி குறித்து கேள்விப்பட்டதை பாகிஸ்ஹான் முன்னாள் வீரர் ரஷித் லடிஃப் யூடியூப் சேனல் ஒன்றுடனான பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் பேசும்போது, “எம்.எஸ்.தோனிக்குள் இருந்த மனப்பான்மை மற்றும் தலைமை பண்பை சவுரவ் சங்குலி வெளிக்கொண்டு வந்தார். நான் முதலில் தோனி ஒரு கால்பந்து வீரர் என்றும், கோல் கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன்.

image


Advertisement

பாகிஸ்தான் வீரர் தன்வீர் அகமத் என்னிடம் தோனி குறித்து கென்யா டூர் ஒன்றின் போது ஃபோனில் பேசியிருந்தார். தன்வீர் கூறும்போது, சச்சின் இடத்தை நெருங்கும் அளவிற்கு இந்திய அணியில் தோனி என்ற வீரர் இருப்பதாக தெரிவித்தார். அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நான், அது எப்படி முடியும், சச்சின் இடத்தில் சச்சின் மட்டுமே என நினைத்தேன். ஆனால் அண்மையில் சச்சினின் இடத்தை தோனி நெருங்கிவிட்டதை தான் உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையாக டி20, ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் திரோபி என மூன்று உலகக் கோப்பைகளையும் வென்ற தோனி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் ஓய்வை அறிவித்திருந்தார். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார்.

பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து குலாம் நபி ஆசாத் விடுவிப்பு : காங்கிரஸில் அதிரடி மாற்றம்

loading...

Advertisement

Advertisement

Advertisement