தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 82,891 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,006 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,35,422 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,46,593 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் பேர் 8,231 உயிரிழந்துள்ளனர்.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை