பாதிக்கப்பட்ட ஏழை பெண்ணுக்கு சொந்த செலவில் பசுமாடு வாங்கிக்கொடுத்த அமைச்சர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பணி நிமித்தமாக காரில் திண்டுக்கல் வழியாக செல்கையில் ஒரு நாளிதழில் வெளிவந்த, பாலை தந்து வாழ்வை தந்த பசு சாலையில் பலியானதால் தவிப்பு என்ற செய்தியை படித்துள்ளார்.


Advertisement

image

உடனே பாதிக்கப்பட்ட வெள்ளத்தாயை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன் கண்டிப்பாக தனது சொந்த செலவில் உதவி செய்வதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் கால்நடைத்துறை இணை இயக்குனரை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட வெள்ளைத்தாய்க்கு மீண்டும் நன்கு பால்தரக்கூடிய பசுமாட்டை அமைச்சரின் சொந்த செலவில் வாங்கித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு நேரில் சென்று ஆறுதல் கூறவும் அறிவுறுத்தினார்.


Advertisement

அதனடிப்படையில் திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள கிரியம் பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட வெள்ளத்தாயை நேரில் சந்தித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஆறுதல் கூறினர். பின்பு நாளை சனிக்கிழமை அமைச்சரின் சொந்த செலவில் நல்ல பசுமாடு வழங்கப்படும் என்று கூறினர்.

image

கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் வாங்கிய பசுமாட்டை, இன்று மாலை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மூலம் பாதிக்கப்பட்ட வெள்ளைதாயிடம் வழங்கினார்.


Advertisement

பசுமாட்டை இழந்து வாழ்வாதாரம் பாதிக்ககப்பட்ட ஏழை பெண்ணுக்கு உரிய நேரத்தில் மனிதநேயத்துடன் தனது சொந்த செலவில் பசுமாட்டை வாங்கிக் கொடுத்து உதவிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வெள்ளைத்தாய் நன்றி கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement