[X] Close

மதுரை: கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் கி.பி. 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்த்த பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.


Advertisement

image
மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று வடக்கு மாசி வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.

image
இதனைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு பழங்கால கல்வெட்டு தொடர்பாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறந்துவந்த தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் கி.பி. 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பதும் ஸ்ரீ குலசேகர பாண்டிய மன்னரின் பெயர் பொறிக்கப் பட்டுள்ளதுடன் மாடக்குளத்தில் மதுரை கோவில் பள்ளிப்பீடம் என்றும் பொறிக்கப் பட்டுள்ளதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image
மேலும் இந்த கல்வெட்டில் ஸ்ரீ குலசேகரபாண்டிய மன்னர் கால வரலாற்று தகவல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement