[X] Close

பெங்களூரு ரயில்நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் ரூ50 ஆக உயர்வு - கூட்டத்தை குறைக்க திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சத்தினால் கூட்டத்தை குறைப்பதற்காக பெங்களூரு ரயில்நிலையங்களிலுள்ள பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூயாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக மூன்று பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயிலிருந்து  50 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தென் மேற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்தது. "தற்காலிகமான இந்த விலை அதிகரிப்பு அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் " என்று ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது. தற்போது உயர்த்தப்பட்ட பயணசீட்டு கட்டண விலை கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் யேசவந்த்பூர் சந்தி ரயில் நிலையங்களில் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மக்கள் போக்குவரத்திற்காக பயணிகள் ரயில்களை இயக்கும் முனைப்பில் உள்ள ரயில்வே நிர்வாகம், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகளை வழியனுப்புவதற்காக அதிகளவில் பிளாட்பாரத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement