கொரோனா அச்சத்தினால் கூட்டத்தை குறைப்பதற்காக பெங்களூரு ரயில்நிலையங்களிலுள்ள பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூயாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக மூன்று பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தென் மேற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்தது. "தற்காலிகமான இந்த விலை அதிகரிப்பு அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் " என்று ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது. தற்போது உயர்த்தப்பட்ட பயணசீட்டு கட்டண விலை கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் யேசவந்த்பூர் சந்தி ரயில் நிலையங்களில் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் போக்குவரத்திற்காக பயணிகள் ரயில்களை இயக்கும் முனைப்பில் உள்ள ரயில்வே நிர்வாகம், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகளை வழியனுப்புவதற்காக அதிகளவில் பிளாட்பாரத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
பாலியல் வன்கொடுமைக்கு உரிமமா திருமணம்? தலைமை நீதிபதிக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?