முன்விரோதம் காரணமாக நண்பனின் தாயை குத்திக்கொலை செய்த இளைஞர்... ராஜபாளையத்தில் சோகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜபாளையத்தில் நண்பனுடன் இருந்த முன் விரோதத்திற்கு பழி தீர்ப்பதற்காக,அவரது தாய் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஆசிரியர் காலனியை அடுத்த வசந்தம் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. லேத்பட்டறை தொழிலாளியான இவரது மனைவி பிரேமா இல்லத்தரசி. இவர்களின் 25 வயது மகன் செல்வக்குமார், மருந்து கடையில் பணியாற்றுகிறார்.


Advertisement

இந்நிலையில், இன்று காலை ராமமூர்த்தியின் வீட்டில் இருந்து பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ராமமூர்த்தி வீட்டுக்கு வந்தபோது இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து சுவர்ஏறி தப்பி ஓடியதாக தெரிகிறது.

image

அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பிரேமாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஏ.டி.எஸ்.பி மாரிராஜ் குத்தாலிங்கம், டி.எஸ்.பி நாகசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


Advertisement

விசாரணையில் பிரேமாவின் மகன் செல்வகுமாருக்கும், அவரது நண்பர் பெரியகடை பஜார் தெருவைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதத்திற்கு பழி தீர்க்கும் விதமாக பிரேமாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ரஞ்சித்தை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

image

நண்பர் மீது இருந்த முன் விரோதத்திற்கு பழி வாங்க, அவரது தாய் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement