மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டடம் மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சொல்லி இடித்தது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி.
இந்நிலையில் வரலாறுதான் உங்களது மவுனத்தை தீர்மானிக்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தாக்கி பேசியுள்ளார் நடிகை கங்கனா.
“மதிப்பிற்குரிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வணக்கம். ஒரு பெண்ணாக உங்களது கூட்டணி ஆட்சியினரால் எனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டு உங்களுக்கு கோபம் வரவில்லையா.
Dear respected honourable @INCIndia president Sonia Gandhi ji being a woman arn’t you anguished by the treatment I am given by your government in Maharashtra? Can you not request your Government to uphold the principles of the Constitution given to us by Dr. Ambedkar? — Kangana Ranaut (@KanganaTeam) September 11, 2020
டாக்டர் அம்பேத்கர் நமக்கு கொடுத்துள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், நியதியையும் நிலைநிறுத்த உங்களது ஆட்சியாளர்களிடம் நீங்கள் வலியுறுத்தக் கூடாதா.
நீங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறீர்கள். உங்களுக்கு ஒரு பெண் அவளது வாழ்வில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்னவென்று தெரியாதா? சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு பெண்களை துன்புறுத்துகிறார்கள். வரலாறு தான் உங்களது மவுனத்தை தீர்மானிக்க வேண்டும். நிச்சயம் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவீர்கள் என நம்புகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா.
மேலும் சிவசேனா கட்சியையும் அவர் தாக்கி பேசியுள்ளார்.
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி