கேட்டாளே ஒரு கேள்வி... சாஹலை கலாய்த்த வருங்கால மனைவி; வைரலான இன்ஸ்டா வீடியோ..

Yuzvendra-Chahal-s-Fiancee-Trolls-Him-On-His-Video-With-AB-De-Villiers
சாஹல் ஜாலியாக இருக்கும் ஒரு வீடியோவில், ‘நான் இல்லாத நேரம் வரை நீங்கள் ஜாலியாக இருக்கலாம்’ என்று அவரது வருங்கால மனைவி அடித்த கமெண்ட் வைரலாகி உள்ளது.
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திரங்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் விளம்பர சூட்டிங்கிற்கு நடுவே ஒரு வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர். அதில் சாஹலை ஒரு வீல் சேரில் உட்கார வைத்து அவரை ஏபி டிவில்லியர்ஸ் தள்ளிக்கொண்டு அங்குமிங்குமாக உருட்டிச் செல்கிறார். சாஹல் ஜாலியாக டாட்டா காட்டியபடி அமர்ந்திருந்தார்.
 
இந்த வீடியோவை ;Country Roads’ என்ற ஆங்கிலப்பாடல் பின்னணியுடன் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் கமெண்ட்டுகள் குவிந்தது. இதற்கு நடுவே சாஹலின் வருங்கால மனைவியான தனஸ்ரீ வர்மாவும் ஒரு கமெண்ட் இட்டார்.
 
‘நான் இல்லாத நேரம் வரை நீங்கள் ஓய்வெடுக்கலாம்," என்று கமெண்ட் இட்டதும், ‘ஆம்’ என பவ்வியமாக ரிப்ளே செய்தார் சாஹல்.
 
தற்போது இந்த வீடியோ இன்ஸ்டா வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 
 
 
View this post on Instagram

Take me home ? @abdevilliers17 ???


Advertisement

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on

 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement