ஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் படம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் க.பெ.ரணசிங்கம் படம் zeeplex ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Advertisement

image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் க.பெ. ரணசிங்கம் படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ளார். விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேலராம மூர்த்தி, சமுத்திரக்கனி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இப்படத்தை கே.ஜீ.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.


Advertisement

இந்நிலையில் இப்படம் zeeplex ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. 5 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் என மொத்தம் 150 நாடுகளில் இப்படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement