பிறந்த நாளில் புதுபட அறிவிப்பு... வெளியானது ஸ்ரேயாவின் ‘கமனம்’ பட போஸ்டர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கிரிஷ் வெளியிட்டார்.


Advertisement

தமிழில் மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன், போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். திருமணமானப் பின்னர் திரைத்துறையை விட்டு சற்று விலகி இருந்த ஸ்ரேயா மீண்டும் “கமனம்” என்ற படம் மூலம் திரைத்துறையில் காலடி வைத்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இயக்குனர் சுஜனா ராவ் இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஞானசேகர் V.S ஒளிப்பதிவு செய்வதுடன், ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

image


Advertisement

 

பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் போஸ்டரை பிரபல இயக்குனர் கிரிஷ், ஸ்ரேயாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 


Advertisement

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement