தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது பள்ளிகள் திறக்கும் என ஆவலுடன் மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படலாம் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்வதற்கான அறிவிப்பு வெளிவரும் எனக் கூறப்படுகிறது. ஐந்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் வாட்ஸ்ஆப், யூ டியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களைக் கற்றுவருகின்றனர்.
வீட்டில் இருந்தபடியே பாடங்கள் படித்து வந்தாலும், நேரடி வகுப்புகள் மூலமே முழுமையான கல்வியைப் பெறமுடியும் என கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே பள்ளிகளில் வகுப்புகளை படிப்படியாக தொடங்குவது பற்றி தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, அக்டோபர் மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் 2 வகுப்புகளும், அதைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, சமூக இடைவெளியுடன் இருக்கைகள், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்