"அந்தக் குரலை மீண்டும் கேட்க முடியாதா?" கண்கலங்கிய டிடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் இழப்பு நடிப்புலகில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கலக்கப்போவது யாரு' போன்ற காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்ற வடிவேல் பாலாஜி பற்றிய நினைவுகளை அவருடன் பணியாற்றியவர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

எத்தனையோ டிவி நிகழ்ச்சிகளில் சேர்ந்து பணியாற்றிய டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, "வடிவேல் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றியது பற்றிப் பேச தொலைதூரம் பின்னோக்கிச் செல்லவேண்டும். ஒரு மகிழ்ச்சியான மனிதர். அவருடன் பேசுவதற்கு நான் மிகவும் விருப்பப்படுவேன். அவருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கும்போது இருவருக்கும் மிகப்பெரிய புரிதல் இருக்கும். எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு முன்பே தயாராகமாட்டார், நாம பார்த்துக்கலாம் என்பார் " என்று தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும் நினைவுகூர்ந்துள்ள டிடி, "இமிட்டேஷன் செய்வதில் பாலாஜிதான் முன்னோடி. அவரை நான் எரிச்சலூட்டுவேன். அவருடன் பணியாற்றும் நாட்களில் எத்தனையோ வேடிக்கையான சம்பவங்கள். வாய்ஸ் நோட்ஸ் மூலம் பேசிக்கொண்டோம். ஜூலை வரையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நல்ல மனிதர். அவருடைய மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. மிக இளம் வயதில் சென்றுவிட்டார். அவருடைய குரலை மீண்டும் கேட்கமுடியாது என்பது மனதை கனக்கவைக்கிறது" என்றும் பகிர்ந்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement