புதிய உச்சம்: 200 பில்லியன் டாலர் சந்தை முதலீட்டை அடைந்த ரிலையன்ஸ் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

200 பில்லியன் டாலர் சந்தை முதலீட்டை அடைந்துள்ள முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை  பெற்றுள்ளது ரிலையன்ஸ் குழுமம்.


Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின் பங்குகள் 8% சதவிகிதம் உயர்ந்து, பங்கின் விலை ரூ.2344.95 ஆக அதிகரித்துள்ளது.  இதன்மூலம் 200 பில்லியன் டாலர் சந்தை முதலீட்டை அடைந்துள்ள முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை தனதாக்கி உள்ளது ரிலையன்ஸ் குழுமம்.

அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சுரின் 1.75 சதவிகித பங்குகளை விற்று ரூ.7,500 கோடி ஈட்டியுள்ளது, முகேஷ் அம்பானியின் குழுமம். இதுவே பங்குகளின் ஏறுமுகத்திற்கு முக்கிய காரணம்.


Advertisement

ரிலையன்ஸின் பங்குகள் ரூ.2344.95 ஆக இருந்த அன்று, ரிலையன்ஸின் சந்தை மதிப்பு ரூ.14.70 லட்சம் கோடியை தொட்டது. மேலும் பார்ட் லி பைட் ரைட் பங்குகள் ரூ.58000 கோடியை எட்டியது. இதன் மூலம், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.15.28 லட்சம் கோடி, அதாவது 208 பில்லியன் டாலரை தொட்டது.

அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனத்தை அடுத்து, கே கே ஆர் என்னும் நிறுவனமும் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement