"நல்ல கலைஞனுக்கு இப்படியொரு கொடூரமான மரணமா?" கண்கலங்கிய ரோபோ சங்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் வடிவேல் பாலாஜி, இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரோபோ சங்கர் கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


Advertisement

"இந்தச் செய்தியைக் கேட்கிற எல்லோருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்னுடன் 19 ஆண்டுகள் மேடையைப் பகிர்ந்துகொண்ட அற்புதமான கலைஞன். தொலைக்காட்சி. திரைப்படங்களில் அவ்வளவு முக்கியமான கலைஞன் அன்பு நண்பன் வடிவேல் பாலாஜி. 42 வயதில் இறந்துவிட்டான். என்னால் வீடியோ பதிவுகூட செய்யமுடியவில்லை. என்னால் பேசமுடியவில்லை.

மேடையில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும், ஒரே ஆளாக மேடையில் எல்லோரது கேள்விக்கும் பதிலளித்து மக்களை மகிழ்வித்த கலைஞன். மரணம் என்பது இப்படி எல்லாம் வருமா என்று நண்பனின் சாவைப் பார்க்கும்போது அவ்வளவு கஷ்டமா இருக்கு.


Advertisement

image

பத்து நாளைக்கு முன்னாடி ஒரு பிரெஷ்ஷரில் அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவரைப் போய் பார்த்தபோது, கண்டிப்பா மீண்டும் வந்துவிடுவார் என்று நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என் மனைவியும் போய் பார்த்துவந்தார். அடுத்து பத்து நாளில் இப்படியொரு செய்தி கேட்பதை என்னால் தாங்கமுடியவில்லை. எல்லோருக்குமே இது ஷாக்கிங் நியூஸ்தான். அவனுடைய ஆத்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்தனை செய்யவேண்டும்.

இந்த மாதிரி நேரத்துலதான் கடவுள் மேலும் வெறுப்பும் வருது. நல்ல கலைஞனுக்கு இப்படியொரு கொடூரமான சாவைக் கொடுப்பதா இறைவா? எல்லோருக்குமே பிடித்த கலைஞனை இழந்துவிட்டோம் " என்று கண்ணீருடன் இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார் ரோபோ சங்கர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement