என்னோடு நீ இருந்தால்... மனைவியின் நினைவாக தத்ரூபமாக சிலை அமைத்த பாசக்கார கணவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இறந்த தன் மனைவியின் 30-ம் நாளை முன்னிட்டு தத்ரூபமாக சிலை அமைத்து வழிபாடு செய்த மதுரையை சேர்ந்த தொழிலதிபர்.


Advertisement

image
மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி இயற்கை எய்தினார். தனது மனைவி தன்னை தனியே தவிக்கவிட்டு சென்றாலும் என்றும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று, மனைவி மீது உள்ள பாசத்தினால் சேதுராமன் தனது மனைவி பிச்சைமணி அம்மாளின் உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்.

image
அதன்படி தனது வீட்டில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில், தனது மனைவியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.


Advertisement

image
பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாளை ஒட்டி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மனைவியின் சிலையை வைத்து வழிபாடு செய்தார் சேதுராமன். பிச்சைமணி அம்மாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் அவர்களின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது

loading...

Advertisement

Advertisement

Advertisement