ஈராக்கிலுள்ள தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அமெரிக்கா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க இராணுவம் ஈராக்கிலுள்ள தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 5,200 லிருந்து 3,000 துருப்புக்களாகக் குறைப்பதாக அறிவித்து, நடவடிக்கையை முறைப்படுத்தியுள்ளது.


Advertisement

image

கடந்த மாதம் அமெரிக்கா, ஈராக்கில் தனது துருப்புகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போராடுவதற்காக ஈராக்கில் சுமார் 5,200 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் உள்ள ஈராக் படைகள் இப்போது தாங்களாகவே ஐஎஸ் அமைப்பை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.


Advertisement

இதனால் அமெரிக்காவும் ஈராக்கும் ஜூன் மாதத்தில் நாட்டில் யு.எஸ். துருப்புக்களைக் குறைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தின. ஈராக்கிலிருந்து யு.எஸ். துருப்புக்களைக் குறைப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்போவதாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் ட்ரம்ப் அமெரிக்காவின் "முடிவற்ற போர்களை" முடிவுக்கு கொண்டுவருவதாக தேர்தல் பிரச்சாரம் செய்தார், ஆனால் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இப்போதும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன.

கடந்த மாதம் ஈராக் பிரதமருடனான சந்திப்பின் போது, ஈராக்கிலுள்ள அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் உறுதியான வாக்குறுதியளித்தார். ஈராக்கிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதற்கு ஈராக்கின் பாராளுமன்றம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement