இன்று திருமணம் நடக்க இருந்த டாக்டரை கொன்றது ஏன்?

Chennai-Doctor-Murder-Case----One-Arrested

சென்னையை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜேஷ்குமார் (26). சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்தி வந்தார். டாக்டர் ராஜேஷ்குமாருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி
இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ்குமார் மாயமானார். 30-ம் தேதி இதுபற்றி கொளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அன்று மாலை அவர் வீட்டின் முன் உள்ள குடிநீர் தொட்டியில் ராஜேஷ்குமார் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 


Advertisement

இந்தக் கொலை குறித்து தனிப்படை விசாரித்து வந்தது. அவர்கள் டாக்டரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பா ராஜேந்திரனின் மகன் மகேந்திரன் (36) என்பவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரிடம் விசாரிக்க சென்ற போது அவர் மாயமாகி இருந்தார். இந்நிலையில் மகேந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார். 
அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ’எனது அப்பா ராஜேந்திரனுடன் பிறந்தவர்கள் 4 பேர். நாங்கள் சென்னை அண்ணாநகர், மேற்கு முகப்பேர் உள்ளிட்ட பல இடங்களில் மருந்து கடை நடத்தி வருகிறோம்.
எனது சித்தப்பா மட்டும் தனது மகன் ராஜேஷ்குமாரை டாக்டராக்கி விட்டார். தற்போது அவருக்கு பணக்கார வீட்டில் திருமணம் செய்ய இருந்தனர். இதனால் எனது சித்தப்பா குடும்பத்தினர் மீது வெறுப்பு இருந்தது. எங்களுக்கு சொந்தமான நிலத்தை பிரிப்பதிலும் கருத்து வேறுபாடு இருந்தது. நான், மருந்துகளை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்வேன். என்னிடம் மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்த ராஜேஷ்குமார், திடீரென நிறுத்தி விட்டார். இதனால் கோபம் ஏற்பட்டது. இதோடு, எனது மனைவிக்கு ராஜேஷ்குமார் பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதுவும் கோபத்தை ஏற்படுத்தியது.
 28-ம் தேதி திருமணத்துக்காக மது விருந்து வைக்கும்படி ராஜேஷ்குமாரிடம் கேட்டேன். சம்மதித்தார். மொட்டை மாடியில் மது அருந்தினோம். போதையில் வரும்போது, எனக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டோம். அப்போது அவர் என் மனைவி பற்றி தவறாகச் சொன்னார். இதனால் அடித்து, குடிநீர் தொட்டிக்குள் அமுக்கி மூடி விட்டு ஒன்றும் தெரியாததுபோல் சென்று விட்டேன். போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். 
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான மகேந்திரனை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement