கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து, சிறு வியாபாரிகளிடம் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டதாக 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஜெராக்ஸ் மிஷின், ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Advertisement

image
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 இளைஞர்கள், வயது முதிர்ந்த சின்னதங்கம், மல்லிகா உள்ளிட்ட காய்கறி சிறு வியாபாரிகளிடம் இரவு நேரத்தில் வந்து அதிகப்படியான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது, கலர் ஜெராக்ஸ் செய்த கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.

image
அதனைத்தொடர்ந்து மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே இளைஞர்கள் தாளநத்தம் பகுதியில் வந்து பொருட்களை வாங்கியுள்ளனர். அப்போது அவர்களை அடையாளம் கண்ட பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயன்றபோது, வியாபாரிகளை கீழே தள்ளி விட்டு தப்பி உள்ளனர். இதனையடுத்து சிறு வியாபாரிகள் கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாளநத்தம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.


Advertisement

image
அந்த விசாரணையில் இருவரும் ஊத்தங்கரை அடுத்த தோரணம்பதியைச் சேர்ந்த ஆனந்தன், ராஜ்குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை காவலர்கள் இருவரையும் கைது செய்து அவர்களது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் மிஷினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பட்டதாரி இளைஞரான ராஜ்குமார், தனது கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்ததும், பொதுமுடகத்தால் வருவாய் இல்லாத காரணத்தால், தனது உறவினரான ஆனந்தனுடன் சேர்ந்து தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. கடத்தூர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement