[X] Close

கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கும் சிறுவன்... சிசிடிவி காட்சியால் பரபரப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அம்பத்தூரில் மர்ம நபர், சிறுவனுடன் கூட்டு சேர்ந்து வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image
அம்பத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கச்சனா குப்பத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கேஸ், ஏசி காப்பர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் கச்சனாகுப்பம், கன்னிஅம்மன் கோயில் தெருவை சேர்ந்த பரிமளா என்ற மூதாட்டி வீட்டில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 10 ஆயிரம் ரூபாய் பணம், 32 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்றனர்.

image
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 10 வயது சிறுவனுடன் வந்த வாலிபர் நள்ளிரவில் வீட்டில் புகுந்து பையில் வைத்திருந்த பணம், மற்றம் செல்போனை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது.


Advertisement

image
அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கொள்ளையர்களை பிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். நள்ளிரவில் மர்ம நபர், பத்து வயது சிறுவனுடன் கூட்டு சேர்ந்து வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement