ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்படுகின்றன. அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய - பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.


Advertisement

இந்திய விமானப்படையின் போர்த்திறனை மேம்படுத்தும் விதமாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, இ்ந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத்தளத்திற்கு வந்தடைந்த அந்த போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுவிட்டன. அவற்றை முறைப்படி விமானப்படையில் இணைக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது.

image


Advertisement

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி, ‌முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி சதீஷ் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில், ரபேல் விமானம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு சர்வ தர்ம பூஜை நடைபெறுகின்றது. அதனைத்தொடர்ந்து ரபேல், தேஜாஸ் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டரின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றிற்குப் பிறகு இந்திய - பிரான்ஸ் தூதுக்குழுக்களின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement